நிலக்கரி இறங்குதளம் அமைக்க எதிர்ப்பு..மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

share on:
Classic

திருச்செந்தூர் அருகே கல்லாமொழியில்  நிலக்கரி இறங்குதளம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆலந்தலை கிராம மக்கள், கடலில் இறங்கி  போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழியில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதலமைச்சர் பழனிச்சாமி உடன்குடி அனல் நிலைய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.  ஆயிரத்து 320 மெகாவாட் திறன் கொண்ட இந்ததிட்டம்  10,000 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது. இந்த அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரியை கொண்டு வருவதற்காக கல்லாமொழி அருகே கடலில் 8 கிலோமீட்டர் நீளத்திற்கு  இறங்குதளம் அமைக்கப்பட்டு வருகிறது. 

தற்போது ஒரு கிலோ மீட்டர் வரை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாலம் அமைப்பதால் இப்பகுதியிலுள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் கூறிவந்தனர். இந்நிலையில் இன்று  நிலக்கரி இறங்குதளம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலந்தலை பகுதியைச் சேர்ந்த 200 நாட்டுப்படகு மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

News Counter: 
100
Loading...

aravind