தமிழக கடலோர பகுதிகளில் மீன்பிடிக்கத் தடை..!

share on:
Classic

தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் அமல் படுத்தப்பட்டுள்ளது.

மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு, இன்று முதல் ஜூன் 15 வரை 61 நாட்களுக்கு மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகை, திருவள்ளூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 13 கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளனர். மீன்பிடி தடைக்காலத்தின் போது தமிழக அரசு வழங்கும் 5 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை 12 ஆயிரமாக உயர்த்த வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind