அயோத்தி வழக்கு இன்று அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணை

share on:
Classic

அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலப்பகுதியை உரிமை கோருவது தொடர்பான வழக்கு விசாரணை, உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமா்வு முன்பு இன்று தொடங்குகிறது.

கடந்த 2010ம் ஆண்டு அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலப்பகுதி யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2 புள்ளி 77 ஏக்கர் நிலப்பகுதியை சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அஹாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என தீர்ப்பு கூறியது. இதை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம்,  வழக்கை புதிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. மேலும்,  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இன்று முதல் இந்த வழக்கை விசாரிக்கும் என்றும் தெரிவித்தது. அதன்படி அயோத்தி தொடர்பான வழக்கு விசாரணை, 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்னிலையில் இன்று  நடைபெறவுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind