சென்னையில் வாகன சோதனையில் ரூ.5,78,00,000 பறிமுதல்

share on:
Classic

சென்னை அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 5 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சென்னை பூந்தமல்லியை அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, ரூ.5,78,00,000 பணம் இருந்தது. அந்த பணத்துக்கான ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பறிமுதல் செய்து பூந்தமல்லி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த பணம் தனியார் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்ட பணம் என்பது தெரிய வந்தது. உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப் பட்ட பின்னர் பணம் திரும்ப கொடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர்.

 

News Counter: 
100
Loading...

aravind