காட்டுத்தீ அடங்குவதற்குள் வெள்ளப்பெருக்கு..நீராலும் நெருப்பாலும் சிதையும் காலிஃபோர்னியா..!

share on:
Classic

காட்டுத்தீயால் சிதைந்துள்ள கலிஃபோர்னியாவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண வனப்பகுதியில் அண்மையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 90க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மாகாணம் முழுவதையும் கரும்புகையால் சூழ்ந்த இப்பேரிடரில் சிக்கி 1,100 பேர் மாயமாகினர். இந்த நிலையில், காட்டுத்தீ அணைந்துள்ள சில பகுதிகள் தற்போது வெள்ளநீரில் மூழ்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. 

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் வட கலிஃபோர்னியாவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீர், தீக்கிரையான குடியிருப்புப் பகுதிகளையும் ஆக்கிரமித்துள்ளது. ஏற்கனவே, காட்டுத்தீயின் ருத்ரதாண்டவத்தால் செய்வதறியாது திகைத்துள்ள கலிஃபோர்னிய மக்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

aravind