இந்த உணவையெல்லாம் ஒதுக்காதீர்கள் ப்ளீஸ்..!

share on:
Classic

இதுவரை உடம்புக்கு கெடுதல் விளைவிப்பதாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த உணவுகளில் சில உண்மையில் உங்கள் உடல் ஆரோகியத்துக்கு மிகவும் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

உடலை பராமரிப்பது குறித்த விழிப்புணர்வு அதிகமாக பரவி வரும் இந்த நிலையில் பலர் தங்கள் புத்தண்டு தீர்மானமாக இந்த உணவுகளை இந்த ஆண்டு எடுத்து கொள்ள மாட்டேன் என்று கூறும் உணவுகளில் சில உண்மையிலேயே உங்களுக்கு நல்ல பயன்களை தருகின்றன என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

முட்டை :

அதிக கொலெஸ்ட்ரோல் என்று பலரும் முட்டைகளை உணவுகளில் எதுத்துக்கொள்ள தயங்குகின்றனர். அனால் உண்மையில் முட்டையில் மிக அதிக புரத சத்து குவிந்து கிடக்கின்றது. மேலும் ரத்த அழுத்தத்தை குறைக்கும் பயோட்டின் என்ற பொருளும் முட்டையில் இருக்கின்றது. கொழுப்பை அதிகரிக்கும் கார்போஹைட்ரெதும் இதில் குறைவே எனவே நீங்கள் நம்பி சாப்பிடலாம்.

வெள்ளை அரிசி :

சக்கரை வியாதிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படும் அரிசியை தவிர்த்து பலரும் கோதுமைக்கு மாறிவருகின்றனர் . ஆனால் ஒரு கப்பில் பாதி அளவு சாதமும், துவரம் பருப்பு சாம்பாரும் சேர்ந்து உட்கொள்ளும்  போது சக்கரை விதிக் காரணமான குளுக்கோஸ் குறைக்கபடும் என்பது தெரியுமா? சாதத்தை மொத்தமாக உங்கள் டயட்டிலிருந்து நீக்குவது உங்களை சீக்கிரமே சோர்வடைய செய்து விடும். அதற்கு பதில் சாதத்தின் அளவை மட்டும் குறையுங்கள்.  
 

பருப்பு வகைகள் :

புரத சத்து நிரம்பி கிடைக்கும் பருப்பு வகைகளில் இருக்கும்  'பாலிபினால்' மற்றும் நார் சத்து மெதுவாக ஜீரணமாகி நன்றாக சாப்பிட்ட உணர்வை தருகிறது. மேலும் சக்கரை நோய் மற்றும் இதய வியாதிகலாய் துரதியடிக்கும் வலிமை துரவரம் பருப்புகளுக்கு உண்டு என்பதையும் மறக்காதீர்கள். 
 

உருளைகிழங்கு :

சரியான முறையில் சமைக்கப்பட்டால் உருளை கிழங்குகளால் உங்கள் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை. சிலர் நினைப்பதை போல் ஒருவரது வாழ்நாளை குறைப்பதில் உருளைக்கிழங்குகளுக்கு எந்த பங்கும் இல்லை. ஆனால் வறுக்கப்பட்ட உருளைக்கிழங்குகளில் இருக்கும் கொலெஸ்ட்ரோல் உங்க இதயத்திற்கு ஆப்பு வைப்பது  உண்மை தான். அதிக எண்ணெய் விடாமல் சமைத்து சாப்பிடும்  போது ருசிக்கும், சத்திற்கும் உருளை கிழங்குகள் உங்களுக்கு கைகொடுக்கும் .
 

 

News Counter: 
100
Loading...

sankaravadivu