இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பது எப்படி..? இயற்கை உணவுகள்...

share on:
Classic

நம் உடலில் உள்ள இரத்ததில் ஹீமோகுளோபின் (Hemoglobin) அளவு குறையாமல் இருப்பது மிக அவசியம். அப்படி குறையும் பட்சத்தில் இயற்கை முறையிலேயே நாம் அதிகரித்துக் கொள்ளலாம்.

உடம்பில் இருக்கும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது அவசியம். இல்லையெனில் உடலில் நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகிவிடும். ஹீமோகுலோபின் அளவு ஆண்களுக்கு சராசரியாக டெசிலிட்டருக்கு (Deciliter) 13.5 முதல் 17.5 கிராம் வரை இருக்கவேண்டும், பெண்களுக்கு சராசரியாக 12.0 முதல் 15.5 கிராம் வரை இருக்க வேண்டும். ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதற்கு இரும்புச்சத்து குறைபாடு ஒரு பொதுவான காரணமாக கூறப்படுகிறது. இருப்பினும் சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க தேவையாக இருப்பது பி-காம்ப்ளக்ஸ் வைட்டமினான ஃபோலிக் அமிலமாகும் (Folic Acid). ஆகவே ஃபோலிக் அமில குறைபாடு  இருந்தால், ஹீமோகுளோபின் அளவு தானாகவே குறைந்து விடும்.

ஹீமோகுலோபின் அளவை சமன் செய்ய சாப்பிட வேண்டிய உணவுகள் : 
ஃபோலிக் அமிலம் அதிகமாக இருக்கக் கூடிய  பச்சை காய்கறிகள், ஈரல், அரிசி சாதம், முளை கட்டிய பயறு, காய்ந்த பீன்ஸ், கோதுமை, தானியங்கள், கடலை, வாழைப்பழம் மற்றும் ப்ராக்கோலி போன்ற உணவுகள் அதிக அளவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். 

பேரீச்சம்பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து, பிறகு வேளைக்கு இரண்டு  அல்லது மூன்று வீதம் எடுத்துக் கொண்டு வந்தால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிடுவதால் இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பதுடன் உடலில் ரத்தமும் அதிகமாக சுரக்கும். தினமும் இரவு அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும். பீட்ரூட் சாப்பிட்டு வந்தாலும் புதிய ரத்ததின் உற்பத்தி அதிகமாகும்.

செம்பருத்திப் பூ நடுவில் இருக்கும் மகரந்தத்தை மட்டும் தவிர்த்து, சுற்றியுள்ள இதழ்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்  ரத்தம் விருத்தியடையும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்ததை சுத்தப்படுத்தும். இலந்தைப் பழம் சாப்பிட்டால் ரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமல்லாமல், உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவும்.

News Counter: 
100
Loading...

Ramya