‘Google Map உங்களை முட்டாளாக்குகிறது’ எச்சரிக்கும் கோவா வாசிகள்..!

share on:
Classic

கூகுல் மேப்ஸ் மீது அவ்வப்போது சில புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில் அந்த ஆப்பை நம்பவேண்டாம் என கோவா வாசிகளால் ‘பாகா பீச்’ அருகில் கட்டப்பட்டுள்ள பேனர்களின் புகைப்படங்கள் வலைதளங்களில் பரவிவருகிறது.

மொழி மற்றும் வழி தெரியாத இடங்களில் சுற்றுலா செல்லும் பலருக்கு துணையாக Google Maps இருக்கிறது. ஆனால், சமீப காலமாக Google Maps மீதான புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. வழி இல்லா தடங்களின் திரும்புக என வாகன ஓட்டிகளை எச்சரிப்பதாகவும், சாதாரன வழியை விட்டு வேறெங்கோ கூட்டி சென்று முகவரி இல்லா இடத்தில் தவிக்க விடுவதாகவும் கூறப்பட்டுவருகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோவாவில் இருக்கும் பாகா கடற்கறை செல்லும் வழி முனைக்கு முன்பாக பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில், ஆங்கிலத்தில் 'You are fooled by Google Maps. This road doesn’t take you to Baga Beach!!! Turn back and take a left turn, Baga is 1 km from here' என அச்சிடப்பட்டிருக்கிறது. கோவாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது சுற்றுலாவை Google Maps-யை நம்பி கெடுத்துக்கொள்ள வேண்டாம் என அப்பகுதி இளைஞர்கள் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளனர். தற்போது இந்த பேனரின் புகைப்படமானது இணையத்தில் பரவி சில மணி நேரங்களிலேயே பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

News Counter: 
100
Loading...

youtube