பணக்கார விளையாட்டு வீரர் யார் தெரியுமா..? இதோ லிஸ்ட்..!

share on:
Classic

போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட பட்டியலின்படி கிரிக்கெட் வீரர் விராட் கோலி அதிகம் சம்பாதிக்கும் இந்திய விளையாட்டு வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

ஓவ்வொரு வருடமும் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டு வருகிறது.  அதன் படி, 2018-ஆம் ஆண்டில் அதிக வருவாய் ஈட்டும் 100 இந்திய பிரபலங்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதிகம் வருமானம் பெரும் இந்திய டாப் நடிகர்களின் லிஸ்டில் பாலிவுட் நடிகர் சல்மான்கான்  முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் இந்த ஆண்டு 253.35 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளார்.

அதேபோல் பணக்கார வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் இந்த ஆண்டு  ரூ.228.09 கோடி சம்பாதித்துள்ளார். இவர் கடந்த ஆண்டு ரூ.100.72 கோடி சம்பாதித்து போர்ப்ஸ் பத்திரிகையில் இடம் பிடித்து இருந்தார். சென்ற ஆண்டை விட அவரது வருமானம் விளம்பர வாய்ப்புகளால் அதிரடியாக இரு மடங்கு பெருகியுள்ளது.

இந்திய அளவில் தோனி 101 கோடியுடன் 5வது இடத்தில் உள்ளார்.  சச்சின் 80 கோடியுடன் 9 வது இடத்தில் உள்ளார்.  இதை தவிர பாட்மிண்டன் வீராங்கனைகள் சிந்து (36 கோடி) மற்றும் சாய்னா நேவால் (16.5 கோடி) பிடித்து ஆச்சரியம் அளித்துள்ளனர். இந்த பட்டியலில் இவர்கள் இருவர் மட்டுமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

News Counter: 
100
Loading...

youtube