ஓசூரில் காட்டு யானைகள் இடம்பெயர்ந்துள்ளதால் வனதுறையினர் எச்சரிக்கை..!

share on:
Classic

காட்டுயானைகள் இடம்பெயர்ந்துள்ளதால் கிராமமக்களுக்கு வனதுறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஓசூர் அருகே 14 காட்டுயானைகள் சானமாவு கிராமத்தை அடுத்துள்ள வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளதால் வனத்தை ஒட்டியுள்ள கிராமமக்கள் பாதுகாப்புடன் இருக்க வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதைதொடர்ந்து, காட்டுயானைகளை கண்காணித்து வரும் வனத்துறையினர், அவைகளை தேன்கனிகோட்டை வனப்பகுதிக்கு விரட்ட முடிவு செய்துள்ளனர். 

இதனிடையே இடப்பெயர்ந்த காட்டுயானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி கிராமப்பகுதிகளின் அருகில் செல்லகூடும் என்பதால், வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் கிராமமக்கள் பாதுகாப்பாக இருக்க வனதுறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind