close
முகப்புகுரங்கணி காட்டுத் தீ: ரூ 4 லட்சம் நிதியுதவி அளிக்க முதலமைச்சர் உத்தரவு 

குரங்கணி காட்டுத் தீ: ரூ 4 லட்சம் நிதியுதவி அளிக்க முதலமைச்சர் உத்தரவு 

குரங்கணி காட்டுத் தீ: ரூ 4 லட்சம் நிதியுதவி அளிக்க முதலமைச்சர் உத்தரவு 

தேனி மாவட்டம் குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் ட்ரெக்கிங் சென்றவர்கள் சிக்கி பலியானது தமிழகத்தையே சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 

கொழுக்கு மலைப் பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்கு சென்னையில் உள்ள டிசி.எஸ்.-ல் பணியுரிந்த பூஜா, நிஷா, நிவேதா, அகிலா உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டோர் சென்றிருந்தனர். இந்நிலையில், அந்த மலைப் பகுதியில் நிகழ்ந்த காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். தற்போது உயிரிழப்பு மேலும் 10 ஆக அதிகரித்தது. 

இந்நிலையில் இதில் உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ 4 லட்சம் நிதியுதவி அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 50,000 நிதியுதவியும் அளிக்குமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்