முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்..

share on:
Classic

முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று காலாமானார், அவருக்கு வயது 66. 

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான அருண் ஜேட்லி கடந்த 9-ம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மதியம் மருத்துவமனையில் அவரின் உயிர் பிரிந்தது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அருண் ஜேட்லிக்கு இரங்கள் தெரிவித்து வருகின்றனர். பஞ்சாபில் வழக்கறிஞர் குடும்பத்தில் பிறந்த ஜேட்லி, டெல்லி ஸ்ரீ ராம் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்தார். கல்லூரி படிக்கும் போதே பாஜகவின் மாணவர் அணி பிரிவான அகில் பாரதிய வித்யார்த்தியின் உறுப்பினராக இருந்தார். 

வழக்கறிஞரான அருண்ஜேட்லி, பிரதமர் மோடியின் முந்தைய அரசின் அமைச்சரவையில் நிதியமைச்சராக பதவி வகித்தார். ஆனால் உடல்நலக் குறைவு காரணமாக அவர் 2019 மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. கடந்த ஆண்டு அவருக்கு நடைபெற்ற சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை மோசமாகவே இருந்து வந்தது. இதனால் அவர் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கலான இடைக்கால பட்ஜெட்டை கூட அவர் தாக்கல் செய்யவில்லை. 

News Counter: 
100
Loading...

Ramya