ரபேல் ஒப்பந்த புதிருக்கான விடை நினைத்ததை விட வேகமாக வெளிவருகிறது - ப.சிதம்பரம்

share on:
Classic

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் டஸால்ட் நிறுவனத்திற்கு சாதகமாக அனைத்து நடைமுறைகளும் கையாளப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில்,  ரபேல் ஒப்பந்த புதிருக்கான விடை, அரசு நினைத்ததை விட வேகமாக வெளிவருவதாகவும், ராணுவ தளவாட ஒப்பந்த விதிகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 126ஐ விட அதிக விலையில் 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கப்பட்டது டஸால்ட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட போனஸ் எனவும், அந்நிறுவனத்திற்கு ஆதரவாக அனைத்து ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இந்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் போது பிரதமர் அலுவலகம் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, குழுவின் மதிப்பை குறைத்துள்ளதாகக் கூறியுள்ள அவர், எவ்வித உத்திரவாதமும் இன்றி பெரிய அளவிலான தொகை முன்பணமாக செலுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

aravind