ஐசிஐசிஐ வங்கியில் மோசடி செய்த விவகாரம் : சந்தா கோச்சார் கணவருடன் ஆஜர்

share on:
Classic

ஐசிஐசிஐ வங்கி மோசடி விவகாரத்தில் முன்னாள் இயக்குனர் சந்தா கோச்சார் மற்றும் அவருடைய கணவர் ஆகியோர் அமலாக்கத்துறை முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

ஐசிஐசிஐ வங்கியின் மேலாண் இயக்குனராக சந்தா கோச்சார் இருந்த 2009-ம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில், வீடியோகோன் நிறுவனத்துக்கு ரூ. 3250 கோடி கடன் வழங்கியுள்ளார். விடியோகோன் நிறுவனம் அதை திருப்பிச் செலுத்தவில்லை என புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஜ நடத்திய விசாரணையில் வங்கி அதிகாரி சந்தா கோச்சாரின் கணவருக்கு வீடியோகோன் நிறுவன அதிபரின் துணை நிறுவனம் ஒன்று ரூ. 64 கோடி அளித்தது தெரியவந்தது. ஆனால், அந்த தொகையை திருப்பி செலுத்தாத நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஐசிஐசிஐ வங்கி மோசடி விவகாரத்தில் சந்தா கோச்சார் மற்றும் அவருடைய கணவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதையடுத்து, இன்று இருவரும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர்.

News Counter: 
100
Loading...

Ragavan