முன்னாள் காவல்துறை இயக்குநர் வீ.ஆர். லட்சுமி நாராயணன் காலமானார்..!!

share on:
Classic

தமிழக முன்னாள் காவல்துறை இயக்குநர் வீ.ஆர்.லட்சுமி நாராயணன் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார்.

தமிழக காவல்துறை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற வீ.ஆர். லட்சுமி நாராயணன் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.  1951 ஐ.பி.எஸ். பணிக்குத் தேர்வான அவர், மதுரை மாவட்ட உதவி கண்காணிப்பாளராக காவல் பணியை தொடங்கினார். அதன் பிறகு, சி.பி.ஐ.யில் இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்ற நேரு, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய் ஆகிய பிரதமர்களின் கீழ் முக்கிய பணியில் இருந்தார். 

நாட்டில் அவசரநிலை முடிவுக்கு வந்த பிறகு, ஊழல் வழக்கு ஒன்றில் இந்திரா காந்தியை கைது செய்த அவரது துணிச்சல் பலராலும் வியப்புடன் பார்க்கப்பட்டது. இதையடுத்து, தமிழக காவல்துறை இயக்குநராக இருந்த வீ.ஆர். லட்சுமி நாராயணன், 1985 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan