இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி - ரகுராம் ராஜன் எச்சரிக்கை..!!

share on:
Classic

இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமான சரிவை சந்தித்துள்ளதாக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பல்வேறு துறைகளில் உற்பத்தி திறன் குறைந்து காணப்படுகிறது. இதனை தொடர்ந்து தனியார் நிறுவனங்களின் முதலீடுகளும் குறைந்துள்ளது. மத்திய அரசிடம் போதுமான நிதி ஆதாரமும் இல்லை. இதனால் பல்வேறு துறை சார்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 6.8 சதாவிகிதமாக குறைந்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் பதவி வகித்தவர்களின் முக்கிய மானவர்களில் ஒருவர் தான் ரகுராம் ராஜன், பொருளாதாரத்தின் நிலை குறித்து ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். இவர் ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவிவகித்த போது இவரது தலைமையில் நாட்டுப் பொருளாதாரத்திலும் வர்த்தகச் சந்தையிலும் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. சிறு, குறு நிறுவனங்களின் வர்த்தகத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதுமட்டுமின்றி யூபிஐ பணப் பரிமாற்ற முறையும் கொண்டு வரப்பட்டது. 

கடந்த 2009 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை முன்கூட்டியே கண்டறிந்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். தற்போது இருக்கும் பொருளாதார நிலை குறித்து இந்தியாவிற்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன். தனியார் நிறுவனங்களை அதிக முதலீடு செய்யும் வகையில் கொள்கை மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் மோடி அரசு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியான GDP-ஐ கணக்கிடும் முறையை மாற்றியமைக்க வேண்டும் எனக் கூறினார். இதற்கு முன் மோடியின் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அளவிற்கு அதிகமாக காட்டப்படிகிறது. இதை மாற்றியமைக்க வேண்டும் எனத் தெரிவித்தார் ஆனால் அதற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை என கூறினார்.

2013 முதல் 2016 ஆண்டு வரை காலக்கட்டத்தில் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜன் அப்போது மோடி அரசுக்கும் இவருக்கும் பலமுறை பிரச்சனைகள் ஏற்பட்டத்தால் 2வது பணிவாய்ப்பை மறுத்தார்.

பல்வேறு தனியார் நிறுவனங்கள் துறை சார்ந்த வளர்ச்சி அளவீட்டை வெளீயிட்டு வருகிறது. அந்த வகையில் ஆட்டோமொபைல், ரியல் எஸ்டேட், நுகர்வோர் உற்பத்தி நிறுவனங்கள் என எல்லாவற்றிலும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. மின்சார துறை, வங்கிசாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள பிரச்சினைகளை உடனடியாக களைய வேண்டும். தனியார் துறையினர் முதலீடு செய்வதை தூண்டும் வகையில் சீர்திருத்தம் இருக்க வேண்டும். ஆட்டோமொபைல் துறை முதல் FMGC துறை வரையில் அனைத்து துறையின் வர்த்தக வளர்ச்சியும் தற்போது மோசமான நிலையை நோக்கி சென்றுக் கொண்டு இருக்கும் நிலையில் இதை உடனடியாகச் சரிசெய்யப் புதிய கொள்கை சீர்திருத்தங்கள் கட்டாயம் அவசியம் என தெரிவித்தார்.

2008-ம் ஆண்டை போன்ற பெரிய பொருளாதார வீழ்ச்சி, மீண்டும் ஏற்படாது என்று என்னால் கணிக்க முடியாது. ஆனால், அப்படி ஏற்பட்டால், அது வேறு காரணங்களால்தான் ஏற்படும். தற்போதைய பிரச்சினைகளை களைந்தாலும், புதிய பிரச்சினைகள் வருவதை தடுக்க முடியாது.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 7 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. ஆனால் வளர்ச்சி இதைவிட குறைவாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது. 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan