விவசாயிகளுக்கு இலவசப் பயிற்சி -திருந்திய நெல் சாகுபடி

share on:
Classic

திருவண்ணாமலையில் ஈஷா விவசாயப் பண்ணை சார்பில் நடைபெற்ற திருந்திய நெல் சாகுபடி முறைப் பயிற்சி முகாமில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். 

 திருவண்ணாமலை நல்லவன் பாளையத்தில் உள்ள ஈஷா விவசாயப் பண்ணையில் திரு. நாகரத்தின நாயுடு அவர்களின் திருந்திய நெல் சாகுபடி முறை பயிற்சி நடைபெற்றது.   ஒற்றை நாற்று நடவு முறை குறித்த விளக்கமும் செயல்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது. அத்துடன் விவசாயிகள் மலர் சாகுபடி, காய்கறி சாகுபடி, பழமர சாகுடியையும் செய்வதன் மூலம் விவசாயிகள் தொடர்ந்து வருமானத்தையும் நிறைவான வாழ்வு பெற முடியும் எனவும் பயிற்சி முகாமில் விளக்கப்பட்டது. 

திருந்திய நெல் சாகுபடி முறையில், நாற்று விட மேட்டுப்பாத்தி அமைக்கும் முறை, விதை நெல் விதைத்தல், நாற்று நடவு செய்ய மார்க்கர் ஓட்டும் முறை, 
தாய் படுக்கையில் இருந்து நாற்று பறிக்கும் முறை போற்றவை குறித்து  வயல்களிலேயே விவசாயிகளுக்கு நேரடி களப்பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

News Counter: 
100
Loading...

admin