காஷ்மீர் ராணுவ முகாம் மீது தாக்குதல், தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புகாஷ்மீர் ராணுவ முகாம் மீது தாக்குதல், தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை

காஷ்மீர் ராணுவ முகாம் மீது தாக்குதல், தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை

February 11, 2018 179Views
காஷ்மீர் ராணுவ முகாம் மீது  தாக்குதல், தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை

சஞ்வான் இராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 2 பேர் வீர மரணமடைந்தனர். 

ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில் உள்ள சஞ்வான் இராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நேற்று இரவு திடீரென தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இந்திய இராணுவ வீரர்கள் பதிலடி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மோதல் இன்னும் முடிவில்லாமல் தொடந்து வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 2 பாதுகாப்பு படையினர் வீர மரணமடைந்துள்ளதோடு, சாமானியர்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும்,  தீவிரவாதிகள் 4  பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சஞ்வான் ஆப்பரேஷனில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 7ஆக உயர்ந்துள்ளது. தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டு ஆப்பரேஷன் விரைவில் முடிவிற்கு கொண்டுவரப்படும் என படையினர் தெரிவித்துள்ளனர்.