சுவிஸ் வங்கிக்கு கட்டம் சரியில்லை... ரூ.30,000 கோடி அபராதம் விதித்த நீதிமன்றம்

share on:
Classic

வரி ஏய்ப்பிற்கு உதவிய குற்றத்திற்காக சுவிஸ் வங்கிக்கு ரூ. 30,000 கோடி அபராதம் விதித்து ஃபிரான்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

வரி வருவாய் இழப்பு:
ஃபிரான்ஸ் நாட்டின் வருமான வரி வருவாய் சமீப காலமாகவே குறைந்த வண்ணமிருந்தது. வரி வருவாயில் கொழுத்து திளைத்த ஃபிரான்ஸ் அரசுக்கு இந்த வருவாய் இழப்பு பேரதிர்ச்சியாக அமைந்தது. இதைத்தொடர்ந்து, வரி வருவாய் இழப்பு ஏற்படுவதற்கு யார் அல்லது எது காரணம் என்பதை ஆய்வு செய்யத் தொடங்கியது ஃபிரான்ஸ் அரசு. ஆய்வின் முடிவில், ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பலர் சுவிஸ் வங்கியில் தங்களது பணத்தை சட்டத்திற்கு புறம்பாக பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

ஃபிரான்ஸ் நீதிமன்றம் அதிரடி:
வருமான வரி ஏய்ப்புக்கு உதவிய சுவிஸ் வங்கிக்கு ரூ. 30,000 கோடி அபராதம் விதித்து ஃபிரான்ஸ் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும், ஃபிரான்ஸ் அரசுக்கு செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகை குறித்து இதுவரை எந்தவொரு உத்தரவையும் நீதிமன்றம் அறிவிக்கவில்லை. ஒருவேளை, இழப்பீட்டுத்தொகை குறித்து நீதிமன்றம் ஏதேனும் உத்தரவிட்டால் சுவிஸ் வங்கிக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத்தின் அளவு இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

என்ன செய்யப்போகிறது இந்தியா...?
சுவிஸ் வங்கியில் கருப்புப்பணம் வைத்திருப்போர் பட்டியலை மட்டும் வைத்துக்கொண்டு இந்திய மத்திய அரசு கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில், ஃபிரான்ஸ் நீதிமன்றம் அதிரடி ருத்ரதாண்டம் ஆடியிருப்பது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதே போன்றதொரு அதிரடி நடவடிக்கையை இந்திய அரசும் முன்னெடுத்தால் கறுப்புப்பணமில்லாத வல்லரசு இந்தியா உருவாகும் என்பது ஒழுங்காக வருமான வரி செலுத்தும் இந்தியர்களின் கனவாக இருக்கிறது. 

News Counter: 
100
Loading...

mayakumar