ஏர்டெலின் இலவச ஹலோ ட்யூன்கள்

share on:
Classic

ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு ஏர்டெல் இலவச ஹலோ ட்யூன்களை வழங்குகிறது.

பாரதி ஏர்டெல் தற்போது அதன் போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு விங்க் மியூசிக் மூலம் இலவசமாக ஹலோ ட்யூன்களை வழங்குகிறது.இன்று ஏர்டெல் வெளியிட்ட அறிக்கையில், விங்க் மியூசிக் நூலகத்திலிருந்து 40 மில்லியன் பாடல்கள் குறிப்பிட்ட ஏர்டெல் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு ஹலோ ட்யூன்களாக மாதாந்திர சந்தா கட்டணம் ரூ .36 இல்லாமல் கிடைக்கும் என்று கூறியுள்ளது. அனைத்து மொபைல் வாடிக்கையாளர்களுக்கும் ப்ரீபெய்ட் அல்லது 129 மற்றும் அதற்கு மேற்பட்ட போஸ்ட்பெய்ட் திட்டங்களில் இந்த சேவையை பெறலாம். இலவச ஹலோ ட்யூன்களைப் பெற, ஏர்டெல் பயனர்கள் விங்க் மியூசிக் பயன்பாட்டின் சமீபத்திய பதிப்பைப் பதிவிறக்கம் செய்து ஹலோ ட்யூன்ஸ் ஐகானைக் கிளிக் செய்து தங்களுக்குப் பிடித்த பாடல்களை ரிங் டோனாக செட் செய்யலாம். பயனர்கள் தங்கள் ஹலோ ட்யூன்களை பல முறை மாற்றலாம் மற்றும் ஒவ்வொரு 30 நாட்களுக்கு ஒருமுறை விங்க் மியூசிக் மூலம் இலவச ஹலோ ட்யூன்ஸ் சந்தாவை புதுப்பிக்க வேண்டும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.  

News Counter: 
100
Loading...

udhaya