மத்திய பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புமத்திய பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

மத்திய பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

February 10, 2018 159Views
மத்திய பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

மத்தியபிரதேசம் மாநிலத்தின் சத்னா பகுதியில் சரக்கு ரெயிலின் 24 பெட்டிகள் தடம் புரண்டதால் மும்பை ஹவுரா வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மத்திய பிரதேசம் மாநிலத்தின் சத்னா மற்றும் ரேவா ரெயில் பாதையில் சரக்கு ரெயில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென சரக்கு ரெயிலின் 24 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு கீழே இறங்கின. 

இதையடுத்து, ரெயிலின் ஓட்டுனர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் சேதமான தண்டவாளங்களை சீரமைத்து வருகின்றனர். மேலும் சரக்கு ரெயில் தடம் புரண்டதால், மும்பை - ஹவுரா வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.