பிரெஞ்ச் ஓபன் : பெண்களுக்கான இறுதி போட்டியில் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ஆஷ்லே பர்டி..

share on:
Classic

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பர்டி கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார். 

கிரான்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் இந்த தொடரில், இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பர்டியும், செக் குடியரசின் மார்கெடா வான்ரொசோவாவும் மோதினர். இதில், ஆஷ்லே பர்டி 6-க்கு 1, 6-க்கு 3 என்ற நேர் செட்களில் மார்கெடா வான்ரொசோவாவை வீழ்த்தி  தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார்.

இதனிடையே இன்று நடைபெற உள்ள ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான ஸ்பெயினின் ரஃபேல் நடாலுடன், நான்காம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டோம்னிக் தியம் மோத உள்ளார். அரையிறுதியில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்திய டோம்னிக் தியம், சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளார். அதேசமயம், பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்புடன் நடால் களமிறங்க உள்ளதால், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Ramya