இந்த விமானத்தில் டிப்ஸ் வாங்கப்படும்...

Classic

'ப்ரான்டியர்' விமானங்களில், விமான பணியாளர்களுக்கு டிப்ஸ் வழங்கும் வசதி புதிதாக அறிமுகபடுத்தபட்டுள்ளது. 

புதிய முயற்சி :

ஹோட்டல்களில் சாப்பிடப்பின் உணவுகளை எடுத்து வரும் வெய்ட்டர்களுக்கு டிப்ஸ் வழங்குவது வழக்கம் . ஆனால் இப்போது விமானத்தில் கூட உங்களுக்கு பணிபுரியும் பணியாளர்களுக்கு அன்புடன் டிப்ஸ் வழங்கும், ஏற்பாடுகளை செய்துள்ளது இந்த விமான நிறுவனம்.கிரெடிட் கார்டு மூலம் விமானத்தில் நீங்கள் ஏதாவது வாங்கினால் உங்களுக்கு பனிபுரியும் விமான பணியாளர்களுக்கு டிப்ஸ் தர விரும்புகிறீர்களா என்ற தேர்வு உங்கள் முன் வந்து நிற்கும். விருப்பம் இருக்கும் பட்சத்தில் நீங்கள் டிப்ஸ் அளிக்கலாம். 

டிப்ஸ் வாங்கப்படும் :

 "எங்கள் விமானங்களில் வேலை செய்யும் பணியாளர்கள் சிறப்பாக தங்கள் கடைமையை ஆற்றி வருகின்றனர்.அதே போல் எங்கள் வாடிக்கையாளர்களும் சிறந்தவர்கள் எனவே அவர்களை நம்பி விமான சேவையில் புதிதான டிப்ஸ் வயங்கும் சேவையை தொடங்கியுள்ளோம்" என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

விமான பணியாளர்களின் வேலை :

பல நேரங்களில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அவசர காலங்களில் அவர்களது தேவைகள் குறித்து விமானத்தில் பணிபுரியும் பணியாளர்கள் தான் பொறுப்பு அதே போல் பயணிகளுக்கு தேவையான உணவு மற்றும் பல்விதமான பானங்களை எடுத்து வந்து கொடுப்பவர்களும் இவர்கள் தான். முகம் சுழிக்காமல் பணி புரியும் இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்த சலுகை வரவேற்பை பெற்று வருகிறது.

News Counter: 
100
Loading...

sankaravadivu