சிம்ஸ் பூங்காவில் தொடங்கியது 61-ஆவது பழக்கண்காட்சி 

share on:
Classic

உதகையில் கோடை சீசனின் இறுதி நிகழ்ச்சியான 61-ஆவது பழக்கண்காட்சி குன்னூர் சிம்ஸ்ப்பூங்காவில் தொடங்கி உள்ளது. 

கோடை விடுமுறை சில நாட்களில் முடிய உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளால் உதகை களைக்கட்டியுள்ளது. இந்தநிலையில் ஆண்டு தோறும் நடக்கும் பழக்கண்காட்சி பொதுமக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துள்ளது. பூங்காவின் முகப்பிலேயே பலா, அன்னாசிபழம் வைத்து அமைக்கப்பட்ட நுழைவு வளைவு, பழங்களால் அலங்கரிக்கப்பட்ட அசோக சின்னம் பார்வையாளர்களை கவர்ந்து உள்ளது. 

இதேபோல் பட்டாம்பூச்சி, மயில், மாட்டுவண்டி உருவங்கள் பழங்களால் அமைக்கப்பட்டது கண்கவர் காட்சியாக உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவந்து காட்சிப்படுத்தப்பட்டுள்ள பழங்களை பொதுமக்கள் உற்சாகமாக கண்டு ரசித்து வருகின்றனர்.

 

News Counter: 
100
Loading...

aravind