மதுரையில் உலகத்தரம் வாய்ந்த மருந்துகள் ஆய்வுக்கூடம் அமைக்க நிதி ஒதுக்கீடு

share on:
Classic

மதுரையில் உலகத்தரம் வாய்ந்த மருந்துகள் ஆய்வுக்கூடம் அமைக்க 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட காதாரத்துறை சார்பில் 108 அறிவிப்புகள் சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பாலின மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து வழிமுறைகள் வெளியிடப்படும் என்றும், அவர்களின் சுகாதாரத் தேவைகள், தேசிய நலத்திட்டம் மற்றும் தேசிய வளரிளம் பருவத்தினர் பாதுகாப்பு திட்டத்துடன் இணைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட நாளில்,  மருத்துவமனை தினமாக கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாநகரில் 20 கோடி ரூபாய் செலவில் உலகத்தரம் வாய்ந்த மருந்துகள் ஆய்வுக்கூடம் நிறுவப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

 

News Counter: 
100
Loading...

aravind