ககன்யான் திட்டம்...விண்வெளியில் சாதனை படைக்குமா இந்தியா..?

share on:
Classic

ககன்யான் திட்டம்  70 சதவீதம் முடிவடைந்த நிலையில், 2021-ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் இயக்குனர் சிவன் தெரிவித்துள்ளார்.

ககன்யான் திட்டம்:

இந்தியர்களை விண்ணுக்கு அனுப்ப இஸ்ரோ எடுத்துள்ள தீவிர முயற்சி தான் ககன்யான் திட்டம். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.10,000 கோடி தனி பட்ஜெட் ஒதுக்கீடு செய்தது. மனிதர்களை அனுப்புவதற்கு முன்பாக  விண்வெளிக்கு  2ஆளில்லா விண்கலங்களை விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.

 

Related image

விண்வெளி வீரர்கள்: 

ககன்யான் மூலம் மூன்று இந்திய ஆராய்ச்சியாளர்கள் விண்வெளிக்கு அனுப்பப்படுவார்கள். அவர்கள் 5-7 நாட்கள் வரை லோ ஆர்பிட்டில் தங்கி பின் பூமிக்குத் திரும்புவார்கள். இதில் ஒரு பெண் இடம்பெறலாம் ஆனால் அது குறித்து இன்னும் இறுதி  முடிவு எடுக்கவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். வீரர்களை தேர்ந்தெடுப்பதில் நிறைய நெறிமுறைகள் இருப்பதால், விண்வெளிக்கு செல்லும்  வீரர்களை தேர்வு செய்வது குறித்து எந்த இறுதி முடிவும் எடுக்கவில்லை. ஆனால் இஸ்ரோ விண்வெளி வீரர்கள் யாரும் இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்படப்போவதில்லை. விமானப்படை  வீரர்களே விண்வெளிக்கு செல்ல உள்ளனர் என்றார்.

 

Image result for astronauts

ககன்யான் திட்டத்தின் பயன்கள்:

இந்த திட்டத்தின் மூலம் விண்ணுக்கு மனிதர்களை அனுப்பிய உலகின் 4வது நாடாக இந்தியா உருவெடுக்கும், அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கு இத்திட்டம் பெரிதும் பயன்படும் என இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ககன்யான் திட்டம் ஒட்டுமொத்த உலகத்துக்கும் ஒரு திருப்புமுனையாக அமையும். 

 

News Counter: 
100
Loading...

youtube