
இந்திய அணியில் 15 ஆண்டுகளாக விளையாடி வந்த கவும் காம்பீர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணியில் தொடக்க வீராக களமிறங்கி அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் கவுதம் கம்பீர் 3வது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் தொடர்களில் 2004 - 2016 விளையாடி உள்ள காம்பீர் 4119 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 9 சதம் மற்றும் 21 அரைசதங்களை அடித்து உள்ளார்.
ஒரு நாள் போட்டிகளில் 2003 - 2013 விளையாடிய அவர் 5238 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 11 சதங்கள் மற்றும் 34 அரைசதங்கள் அடித்துள்ளார். 2011 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தின் போது இலங்கை அணிக்கு எதிராக 97 ரன்கள் குவித்து கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
The most difficult decisions are often taken with the heaviest of hearts.
And with one heavy heart, I’ve decided to make an announcement that I’ve dreaded all my life.
➡️https://t.co/J8QrSHHRCT@BCCI #Unbeaten— Gautam Gambhir (@GautamGambhir) December 4, 2018
கவுதம் 37 டி20 போட்டியிலும், ஐபிஎல் தொடரில் தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வந்தார். ரஞ்சி கோப்பையில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் காம்பீர் வரும் டிசம்பர் 6ம் ஆந்திரா அணிக்கு எதிரான போட்டியே தனது கடைசி போட்டி என்று அறிவித்துள்ளார்.