“1947-க்கு பிறகு காங்கிரஸ் கலைக்கப்பட வேண்டும் என காந்தி விரும்பினார்” - பிரதமர் மோடி

share on:
Classic

காந்திய கொள்கைகளுக்கு எதிரான கொள்கைகளை கொண்டுள்ளதால் 1947-க்கு பிறகு காங்கிரஸ் கலைக்கப்பட வேண்டும் என்று மகாத்மா காந்தி விரும்பினார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தண்டி யாத்திரை தொடங்கிய 89-வது ஆண்டை கொண்டாடும் விதமாக பிரதமர் மோடி அது தொடர்பான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் “காந்தியத்திற்கு எதிரான கொள்கைகளை காங்கிரஸ் கொண்டுள்ளதால் 1947-க்கு பிறகு காங்கிரஸ் கலைக்கப்பட வேண்டும் என்று காந்தி விரும்பினார். வேற்றுமை மற்றும் சாதி பிரிவுகளை காந்தி நம்பவில்லை. ஆனால் தற்போது சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்த காங்கிரஸ் தயங்குவதில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தி. நாட்டின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை காக்கும் விதமாக தண்டி யாத்திரை ஒரு அடையாளமாக விளங்கியது. காந்தியின் கொள்கைகளிலிருந்து காங்கிரஸ் விலகி வருகிறது. ஆனால் பாஜக அநீதி மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுக்கு எதிராக காந்தியின் வழியில் போராடி வருகிறது. நாங்கள் ஊழலில் ஈடுபட்டு வரும் அனைவரையும் தண்டித்து வருகிறோம். காங்கிரஸ் வாரிசு அரசியலை மட்டுமே விரும்புகிறது, ஜனநாயக கொள்கைகளை அவர்கள் மதிப்பதில்லை” என்று எழுதியுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ramya