ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் கணேச மூர்த்தி போட்டி..!

share on:
Classic

ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில்  அக்கட்சியின் பொருளாளர் கணேசமூர்த்தி போட்டியிட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்துள்ள மதிமுகவிற்கு ஒரு மாநிலங்களவை, ஒரு மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நேற்று கூட்டணி கட்சிகள் போட்டியிட உள்ள தொகுதிகள் எவை என்பதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். அதன்படி மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இந்நிலையில் வரும் மக்களவை தேர்தலில் மதிமுக பொருளாளர் கணேசமூர்த்தி, ஈரோடு தொகுதியில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

sajeev