வடமாநிலங்களில் கங்கா தசரா கொண்டாட்டம்..!

share on:
Classic

கங்கை பூமிக்கு வந்த நாளையொட்டி, வடமாநிலங்களில் இன்று கங்கா தசரா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தசமி திதியன்று வடமாநிலங்களில் கங்கா தசரா கொண்டாடப்படுவது வழக்கம். ஏகாதசி நாளுக்கு முந்தைய நாளான இன்று, கங்கை பூமிக்கு வந்ததாக கருதப்படுகிறது. மக்களின் பாவங்களை போக்க பிரம்மனின் கமண்டலத்தில் இருந்து கங்கை பூமிக்கு வந்தாக புராணங்கள் கூறுகின்றன. இந்த நாளை வடமாநில மக்கள் கங்கா தசராவாக கொண்டாடுகின்றனர். இன்றைய தினத்தில் ஹரித்வார், ரிஷிகேஷ், வாரணாசி, அலாகாபாத் மற்றும் பாட்னா அகிய பகுதிகளில் கங்கையில் நீராடி, சூரியனை வணங்கி பொதுமக்கள் தங்களது பாவங்களை போக்கி கொள்கின்றனர்.

News Counter: 
100
Loading...

Ragavan