அரையிறுதியில் இந்தியா தோல்வி.. பேச முடியாமல் தவித்த கங்குலி..!

share on:
Classic

நேற்று இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடந்த அரையிறுதியில் இந்திய அணி தோல்வியுற்ற போது கங்குலி கமெண்டரியில் பேச முடியாமல் தவித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான அரையிறுதி போட்டி நேற்று மான்செஸ்டரில் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது.   

ஆட்டத்தின் இறுதி வரை இந்திய அணி வீரர்கள் வெற்றிக்காக போராடினர். ஜடேஜா, தோனி அவுட்டானதும் வெற்றி நியூசிலாந்து அணியின் பக்கம் சென்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னால் கேப்டன் கங்குலி வர்ணனை செய்து வந்தார். ஆட்டம் முழுவது அவர் சிறப்பான வர்ணனை செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார்  

வர்ணனையில் இருந்த கங்குலி ஆட்டத்தின் நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும் போது இன்னும் தோனி களமிறக்காமல் ஏன் இருக்கிறார்கள் என இடைஇடையே கேள்வி எழுப்பி வந்தார். இந்நிலையில், தோனி 7-வது வீரராக களமிறக்கப்பட்டார். அதன் பிறகு தோனி மற்றும்  ஜடேஜா இருவரின் ஆட்டத்தை தொடர்ந்து ரசிக்கும் படி வர்ணனை செய்து வந்தார். இந்நிலையில் ஜடேஜா 77 ரன்களுடன் வெளியேற அவரையடுத்து தோனி ரன் அவுட்டில் வெளியேற இந்திய தோல்வி உறுதியானதால் என்ன பேசுவது என தெரியாமல் அமைதியானார். இது சம்மந்தமான வீடியோ இப்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

News Counter: 
100
Loading...

Saravanan