மக்கும் குப்பைகளை பயனுள்ள உரமாக மாற்றுவது எப்படி..?

share on:
Classic

மக்கும் குப்பைகளை தெருவுக்கு தாரைவார்க்காமல் பயனுள்ள உரமாக எவ்வாறு மாற்றலாம் என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

மக்கும் குப்பை, மக்காத குப்பை இரண்டையும் பிரித்து குப்பைத் தொட்டியில போடுமாறு, மாநகராட்சி நிர்வாகம் எத்தனை முறை சொன்னாலும், பொதுமக்கள் அவற்றை காதில் போட்டுக்கொள்வதில்லை… காய்கறித் தோலையும் அழுகின தக்காளியையும் பத்திரமா பிளாஸ்டிக் கவர்ல போட்டுத்தான் குப்பைத் தொட்டியில் வீசுவது வாடிக்கையாகயான ஒன்று... அதிலும் வார இறுதியில் வீசப்படுற மீன் போன்ற இறைச்சிக் கழிவுகள் குறித்து சொல்லவேண்டியதில்லை... 

தொடர்ந்து அனைவரும் குப்பையை வெளியே வீசிவந்தால், எதிர்கால தலைமுறையினர் குப்பைமேட்டுல்தான் வாழவேண்டிய நிலை ஏற்படும்... தினமும் குப்பைகளை தெருவில் கொட்டிக்கொண்டிருந்தால், எதிர்கால பூமி எப்படியிருக்கும். அனை நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை, இதற்கு தீர்வாக, கழிவுகளை பயனுள்ள உரமாக மாற்றி வருகின்றனர் சென்னை மாநகராட்சியின் அண்ணா நகர் மண்டல அதிகாரிகள். சென்னை எழும்பூரில் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் கிடங்கு அமைக்கப்பட்டு, சேத்துப்பட்டு, எழும்பூர் உள்ளிட்டப் பகுதிகளில் சேரும் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது. 
 
முதலில், தரம் பிரித்தெடுக்கப்படும் குப்பைகள் பேட்டரி கார்கள் மூலம் கிடங்குக்கு கொண்டு வரப்படுகிறது... பின்னர் இயந்திரம் மூலம் அவை தூளாக்கப்பட்டுகிறது. இதற்காகவே, மும்பையில் இருந்து 12 லட்சம் மதிப்பில் பிரத்யேக இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. காய்கறி கழிவுகள், தென்னை ஓலைகள், இளநீர் கூடு என அனைத்தையும் தவிடுபிடியாக்குகிறது இந்த இயந்திரம். அவை, 12 அடி நீளமும், 4 அடி அகலமும் உடைய கண்டெய்னரில் சேமிக்கப்பட்டு, சிதைக்கப்படுவதாக கிடங்கு மேற்பார்வையாளர் சத்யா தெரிவித்துள்ளார். 

20 நாட்களுக்கு பிறகு சிதைவடைந்த குப்பைகளை காயவைத்து, நன்றாக உலர்ந்த பின்பு சலித்த, எடுத்து இயற்கை உரமாக்கப்படுகிறது. இந்த உரத்தை வீட்டுக்கும் பயன்படுத்தலாம், விற்பனையும் செய்யலாம். குப்பைகளை பயனுள்ள வகையில் மறுசுழற்சி செய்யப்படும் வேளையில், தூய்மை என்ற ஒன்றை நாம் அனைவரும் கடைபிடித்தால், சுற்றுச்சூழல் மாசடையாமல் பாதுகாக்கப்படுவதுடன், சுகாதாரமான வாழ்வுக்கும் வழிவகுக்கும்.

News Counter: 
100
Loading...

Saravanan