சமையல் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வு..! இன்று முதல் அமல்...

share on:
Classic

கடந்த 3 மாதங்களாக குறைக்கப்பட்டு வந்த சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை, கேஸ் சந்தை விலை மீது விதிக்கப்பட்ட வரியின் காரனமாக தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள்  இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டரின் விலையை ஒவ்வொரு மாதமும் மாற்றி நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், கேஸ் சந்தை விலை மீது விதிக்கப்பட்ட வரியின் விளைவாக தற்போது சிலிண்டரின் விலை அதிகரித்துள்ளது. மானியம் அல்லாத சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 42 ரூபாயும், மானியத்துடன் வழங்கப்படும் சிலிண்டரின் விலை ரூ. 2.08 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது.

இதனால், மானிய சிலிண்டரின் விலை ரூ. 495.61 ஆகவும் மானியமில்லாத சிலிண்டரின் விலை ரூ. 701.50 ஆகவும் உயர்ந்துள்ளது. மானிய சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதையடுத்து, பிப்ரவரி மாதம் ரூ. 165.47 பைசாவாக வழங்கப்பட்டு வந்த மானியத்தொகை, இனி ரூ. 205.89 பைசாவாக வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.

News Counter: 
100
Loading...

Ragavan