ஆடுகளத்திலும் சண்டை..அரசியல் களத்திலும் சண்டை..சண்டைக்கார கவுதம் கம்பீர்..!

share on:
Classic

கவுதம் கம்பீருக்கும், காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முக்திக்கும் இடையே டுவிட்டரில் அதிபயங்கர வார்த்தை போர் நடைபெற்ற வருகின்றது. வம்பு சண்டையாக இருந்தாலும் சரி வந்த சண்டையாக இருந்தாலும் சரி விடாமல் வரிந்து கட்டுவது கவுதம் கம்பீருக்கு அரசியலால் வந்த புது பழக்கம் இல்லை, அது கிரிக்கெட் ஆடுகளத்தில் இருந்தே தொடரும் பழக்கம்தான்.

 

வாழ்க்கையின் முதலில் இருந்தே சண்டை:

தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முதலில் இருந்தே சண்டைக்கு பெயர் போனவர் கவுதம் கம்பீர். 2005ம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற பேட்டியில்  தென் ஆப்பிரிக்கா அணி 169 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் கடும் நெருக்கடியில் இருந்த பந்து வீச்சாளர் நெல், கவுதம் கம்பீரை வம்புக்க இழுத்தார். பொருமை காத்த கம்பீர் தனது ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுக்க தொடங்கினார். அப்போதும் தொடர்ந்து நெல் வாய்ச்சண்டைக்கு இழுத்ததால், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கம்பீர் வாக்குவாதத்தில் இறங்கினார். வாக்கு வாதம் ஒரு கட்டத்தில உச்சத்தை அடைந்ததை அடுத்து நடுவர்கள் வந்து தடுத்தனர். 

 

அஃப்ரிடியிடம் மோதிய கம்பீர்:

உலகளவில் கிரிக்கெட் களத்தை சண்டை களமாக மாற்றுவதில் சிம்மசொப்பனமாக இருந்து வந்த சையத் அஃப்ரிடியிடமும் கம்பீர் கோதவில் குதித்துள்ளார். 2007ம் ஆண்டு நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பந்து வீச்சாளரான சையத் அஃப்ரிடி, ரன் ஓட இடையூறாக நின்றதால் அவரை இடித்து தள்ளிவிட்டு ஓடினார். இதனால் கடுப்பான அஃப்ரிடி, கம்பீருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இந்த சண்டையின் வீடியோக்கல் பின் நாட்களில் பெரிதும் வைரலானது. 

 

கைகலப்பு வரை சென்ற வாட்சன் சண்டை:

அதன் பிறகு அரசியல் காரணத்தால் இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் நடைபெறாமல் இருந்தது. இதையடுத்து இந்தியா பாகிஸ்தானுக்கு பிறகு களம் இந்தியா ஆஸ்திரேலியா என மாறியது. 2008ம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஷேன்வாட்சனுடன் நடந்த வாக்குவாதம் கைகலப்பு வரை சென்றது. அஃப்ரிடி போன்றே தொடக்கம் முதலே கம்பீரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த வாட்சன் ஒருகட்டத்தில் கம்பீரை வீழ்த்த முடியாமல் திணறி நின்றார். அப்போது கம்பீர் ரன் எடுக்க ஓடிக்கொடிண்ருக்கும் போது வாட்சன் குறுக்கே நின்றார். அப்போது கம்பீர் தனது கைளால் வாட்சன் விலாவில் குத்தினார். கிரிக்கெட் தளத்தில் மிக பெரிய சர்ச்சையானது. 

 

கம்பீரின் முதல் பெரிய சண்டை:

கம்பீரின் முதல் பெரிய சண்டை என்பது 2010 ஆண்டு நடந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது நடைபெற்றது. பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல், கவுதம் கம்பீரை தொடர்ந்து வம்புச்சண்டைக்கு இழுத்துவந்தார். அப்போது கவுதம் கம்பீரின் பேட்டில் பந்து படுவதற்கு முன்பே அவுட் என கத்தினார் கம்ரான் அக்மல். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற, கம்பீர் தேனீர் இடைவேளையின் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரது சண்டையும் முற்றியதை அடுத்து, கேப்டன் தோனியும் நடுவர்களும் சமரசத்தில் ஈடுபட்டனர். 
 

விராட் கோலியுடன் போர்:

இந்நிலையில், மற்ற நாட்டு வீரர்களுடன் மோதி கொண்டிருந்த கம்பீர் ஐபில் போட்டிகளில் இந்திய வீரர்களிடம் மோத ஆரம்பித்தார். அதுவும் தனது நெருங்கிய நண்பரான விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த கம்பீர் விராட் கோலியின் விக்கெட் வீழ்த்தப்பட்டதையடுத்து மகிழ்ச்சியில் துள்ளிக்கொண்டிருந்தார். இதை பார்த்து கடுப்பான கோலி, கம்பீரை நோக்கி சண்டையிடும் தொனியில் கத்த இருவருக்கும் கைகலப்பு நடந்துவிடுமோ என இந்திய ரசிகர்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்த கம்பீர், எதிரணியில் இருந்தால் சண்டையிடுவோம், ஒரே அணியில் இருந்தால் ஒற்றுமையாக இருப்போம் என தெரிவித்தார். 

 

இப்படி கிரிக்கெட் களத்தில் மாரி மாரி சண்டையிட்டு வந்து கம்பீருக்கு அரசியல் களம் என்பது சற்று புதிதுதான் என்றாலும், இங்கேயும் தனது சண்டையிடும் குணத்தை கம்பீர் மாற்றிக் கொள்ளவில்லை என்பதே நிதர்சனம். 

 

 

News Counter: 
100
Loading...

aravind