"இந்திய ராணுவத்தில் ஓரினசேர்க்கைக்கு இடமில்லை" - ராணுவ தளபதி பிபின் ராவத் திட்டவட்டம்

share on:
Classic

"இந்திய ராணுவத்தில் ஆண் ஓரின சேர்க்கை அனுமதிக்கபடாது" என்று இந்திய ராணுவத்தின் தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

ராணுவதத்திற்கென்று தனி விதிகள்..
ஓரினசேர்க்கைக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ள நிலையில் இந்திய ராணுவத்தில் இந்த சட்டத்துக்கான எதிரொலி என்ன என்பது பற்றி பத்திரிகையாளர்கள் அவரிடம் கேட்டதர்க்கு "இந்திய ராணுவத்தில் அதை எப்போதும் அனுமதிக்க மாட்டோம். இந்திய ராணுவத்தில் ஓரின சேர்க்கைக்கான தனி விதிகள் உள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.

இங்கு வேற மாதிரி தான்...
மேலும் பேசிய அவர் "நாட்டின் சட்டத்துக்கு மேல் முடிவெடுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை. எனினும் இந்திய ராணுவத்தில் ஒருவர் இணையும் போதே சில உரிமைகளையும், சலுகைகளையும் விட்டு தர தான் வேண்டியுள்ளது .சில விஷயங்கள் இங்கு வேறு மாதிரி தான்" என்று கூறியுள்ளார்.
 
தடையை நீக்கிய நீதிமன்றம்
கடத்த செப்டம்பர் மாதம் ஐந்து நீதிபதிகள் கொண்ட குழு 'வழக்கத்துக்கு மாறான உறவு முறைகளான ஓரின சேர்க்கையை தடை செய்வது அரசியலமைப்பு எதிரானது' என்று கூறி தடையை நீக்கியது.  நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இந்த தீர்ப்பை ஓரின சேர்க்கையாளர்கள் கொண்டாடி தீர்த்தனர். தற்போது இந்தியா முழுவதும் நடைமுறையில் உள்ள இந்த சட்டத்திற்கு ராணுவத்தில் இடமில்லை என்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

News Counter: 
100
Loading...

aravind