இளம் பெண்ணின் அறைக்குள் இருந்தது பேயா?....திகிலூட்டும் உண்மை சம்பவம் !

Classic

இளம் பெண் ஒருவர் தங்கியிருந்த அறையில் நீண்ட நாட்களாக நடந்து வந்த அமானுஷ்யங்களை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

பேய் :
அமெரிக்காவின் கரோலினா பகுதியில் இருக்கும் அபார்ட்மெண்ட் ஒன்றில் தங்கி, அருகிலிருந்த கல்லூரிக்கு சென்று வந்தார் 'மேடி' என்ற இளம்பெண். அப்போது தான் அவரது அறையில் இருந்து விசித்திரமான சத்தங்கள் வர ஆரம்பித்தன. ஆனால் அப்போது அதை பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளாத அந்த பெண், ஏதாவது மிருகத்தின் ஒலியாக இருக்கலாம் என அசால்ட்டாக விட்டுவிட்டார். பின்பு அவரது துணிகளும் காணாமல் போக ஆரம்பித்தன. பூட்டியிருக்கும் அறைக்குள் நடக்கும் இந்த விசித்திரங்களை பற்றி தன் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டார் மேடி. அவர்களோ "உன் அறைக்குள் பேய் தான் இருக்கிறது" என்று கிளப்பி விட்டிருக்கின்றனர்.

சோதனை :
பேய் பயத்தினால் மேடியின் தூக்கமே தொலைந்து போனது. உண்மையை கண்டுபிடிக்க நினைத்தவர் அன்று அறை முழுவதும் சோதனையிட முடிவு செய்தார். விசித்திர சத்தங்கள் வந்த இடத்தை கூர்மையாக கவனித்தார். கடைசியில் அது அவரது அலமாரியில் இருந்து தான் வருகிறது என்று கண்டுபிடித்தார். அலமாரிக்கு அருகில் சென்றவர் "யார் அது?" என்று தைரியமாக கேட்டே விட்டார். அலமாரிக்குள் இருந்து யாரோ ஒருவர் பதில் சொன்னதும் மேடிக்கு மயக்கமே வந்து விட்டது. 

 யார் அது...?
அலமாரி கதவுகளை திறந்து பார்த்த போது, 30 வயது மிக்க மனிதர் ஒருவர் மேடியின் உடைகள் மற்றும் சாக்ஸை அணிந்து கொண்டு ஒடுங்கி உட்கார்ந்திருந்தார். அப்போது தான் காணாமல் போன உடைகள் பற்றிய உண்மை அவருக்கு புரிந்தது. நைசாக அவரிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்த மேடி, அப்படியே தன் காதலருக்கும் போன் செய்தார். ஆனால் அந்த மனிதர் எந்த அச்சுறுத்தலிலும் ஈடுபடாமல் உண்மை வெளிவந்ததை அறிந்து, அலமாரியை விட்டு வெளியே வந்து ஏதோ பழக்கப்பட்ட இடம் போல, அங்கும் எங்கும் சுதந்திரமாக நடக்க ஆரம்பித்துள்ளார் . மேடியின் காதலர் வந்ததும் ஒரே ஓட்டமாய் ஓடி மறைந்துள்ளார். 

திருடன் திருடன்..!
இந்த சம்பவத்தை பற்றி புகார் அளித்தார் மேடி. அப்போது தான் அந்த நபர் ஏற்கனவே பல திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு கைதான ஆண்ட்ரூ என்பது தெரியவந்தது. எப்படியோ அந்த அறைக்குள் நுழைந்த அவர் அங்கேயே தங்க ஆரம்பித்துள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் கடும் பீதியில் இருக்கும் மேடி வேறு ஒரு வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

priya