புத்தகங்களால் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட கோபுரம்..!

share on:
Classic

புத்தகங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கோபுரம் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

சியான் கட்டிடக் கலை மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள கலை மண்டபத்தில் 14 டன் எடையுள்ள பாடப்புத்தகங்களால் கட்டப்பட்ட 11 மீட்டர் உயர கோபுரம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 16 மி.மீ. தடிமன் கொண்ட இரும்புத் தகடுகளில் பசை பயன்படுத்தி புத்தகங்கள் ஒன்றோடு ஒன்றாக ஒட்டப்பட்டுள்ளன. டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில் காகித புத்தகங்களுக்கான பயன்பாடு குறைவதை சுட்டிக்காட்டும் வகையில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind