7 மணி நேரத்திற்கு மேல் பரத நாட்டியம் ஆடி சாதனை படைத்த மாணவி

share on:
Classic

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில்  9-ம் வகுப்பு மாணவி தொடர்ந்து 7 மணி நேரத்திற்கு மேல் பரத நாட்டிய நடனம் ஆடி சாதனை படைத்துள்ளார்.

சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி கிரண் அக்க்ஷயா என்பவர் கடந்த 7 வருடங்களாக பரத நாட்டியம் பயின்று வருகிறார். இந்நிலையில் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ராணி சீதை ஹாலில் நடைப்பெற்ற சாதனை முயற்சியில் புஷ்பாஞ்சலி, அலாரிப்பு, சஜித்ஸ்வரம், சடாச்சரம், மீனாட்சி சப்தம் உள்ளீட்ட பல்வேறு தாளங்களிலும், ராகங்களுக்கு ஏற்ப நடனம் ஆடினார். 

இதையடுத்து இந்த சாதனை முயற்சியை இந்தியன் புக்ஸ் ஆப் ரெக்கார்ட் அங்கிகரித்தனர். இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவி கிரண் அக்க்ஷயாவுக்கு நடுவர் விவேக் ராஜா பாராட்டி இந்தியா புக்ஸ் ஆப் ரெகார்டு சாதனை சான்றிதழை வழங்கினார்.

 

News Counter: 
100
Loading...

sajeev