நினைத்தது நிறைவேற வேண்டுமா?அப்படியென்றால் இந்த கோவிலுக்கு செல்லுங்கள்...

share on:
Classic

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாலாமேடு எனும் ஊரில் அஷ்டவராகி கோயில் உள்ளது. இக்கோயில் உலகிலேயே வராகஹியம்மனுக்கு அமைக்கப்பட்ட முதல் கோயிலாகக் கருதப்படுகிறது.

வராஹி திருமாலின் வராக அம்சமாவார். இவர் வராகமெனும் பன்றி முகமும், எட்டு கரங்களையும் உடையவர். பின் இரு கரங்களில் தண்டத்தினையும், கலப்பையையும் கொண்டவராவார். இவர் கருப்பு நிற ஆடையுடுத்தி சிம்மம் வாகனத்தில் அமர்ந்திருக்கிறார். மகா வராகி, ஆதி வராகி, ஸ்வப்னவராகி, லகு வராகி, உன்மத்த வராகி, சிம்ஹாருடா வராகி, மகிஷாருடா வராகி, அச்வாருடா வராகி என்போர் எட்டு வராகிகள் (அஷ்டவராகி) என்று அழைக்கப்படுகிறார்கள்.

 இவர் ஏழு சப்தகன்னியர்களில் ஒருவர் ஆவார். இக்கோவிலில் செவ்வாய், வியாழன் மற்றும் சனி கிழமைகளில் குறி சொல்லப்படும்.  வாராஹியை வழிபடுகிறவர்களுக்கு மூன்று லோகத்திலும் எதிரிகள் இல்லை.  ஆனால் ஒரு விஷயம் வாராஹி வழிபாட்டுக்கு முக்கியம் உள்ளத்தூய்மையும் சுத்தமும், சிறிதளவும் காமத்தின் பால் உள்ளம் செல்லுதலாகாது. வாரகஹி தேவ குணமும் மிருக பலமும் கொண்டவள். இதனால் தான் உக்கிர தெய்வம் என்று சொல்லுவார்கள். தவறுக்கான தண்டனையும் பெரிதாக இருக்கும். நீங்கள் கேட்டதைக் கொடுக்கும் வல்லமை உடையவள். 
 

News Counter: 
100
Loading...

youtube