தேசிய தலைவர்களுக்கு பாரபட்சம் காட்டாத தமிழக நெட்டிசன்கள்..!!

share on:
Classic

டுவிட்டரில் GOBACKRAHUL என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

தென்னிந்திய வரும் தேசிய கட்சி தலைவர்களுக்கு தமிழக நெட்டிசன்கள் பாரபட்சமின்றி ஒரே மாதிரியான வரவேற்பை அளித்து வருகின்றனர். எப்போதெல்லாம் மோடி தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் Go Back Modi என்ற ஹேஸ்டேக்கை இந்தியா அளவில் டிரெண்டிங் செய்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதேபோல் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் தமிழக வருகைக்கும் எதிர்ப்பு தெரிவித்து, டுவிட்டரில் Go back Rahul என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடிக்க வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல்ஈ, VanakkamRahulGandhi என்ற ஹேஸ்டேக் இரண்டாவது இடத்தையும், GOBACKPAPPU என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. மோடி, ராகுல் என பாரபட்சமின்றி தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது, தேசிய கட்சிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

News Counter: 
100
Loading...

vinoth