கோட்சே காந்தியை கொன்றார், பிரக்யா அவரது ஆன்மாவை கொன்றுவிட்டார் : கைலாஷ் சத்யார்த்தி வேதனை..

share on:
Classic

கோட்சே காந்தியை கொன்றார், அவரது ஆன்மைவை பிரக்யா தாகூர் கொன்றுவிட்டதாக கைலாஷ் சத்யார்த்தி தெரிவித்துள்ளார். 

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்தி பிரக்யாவிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் “ காந்தியின் உடலை கோட்சே கொன்றார். ஆனால் பிரக்யா போன்ற நபர்கள், அமைதி, சகிப்புத்தன்மையுடன் வாழும் அவரது ஆன்மாவை கொன்றுவருகின்றனர். அரசியல் கட்சிகளுக்கும்,அரசியலுக்கும் அப்பாற்பட்டவர் தான் மகாத்மா காந்தி. அவரை பாஜகவிலிருந்து நீக்கி, அக்கட்சி ராஜதர்மத்தை பின்பற்ற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என்ற கமல்ஹாசனின் கருத்துக்கு பதிலளித்த பாஜக வேட்பாளர் பிரக்யா தாகூர், கோட்சே  ஒரு தேசபக்தர் என்று தெரிவித்தார். அவரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முஃப்தி, தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட பல தலைவர்கள் தங்கள் கண்டனங்களை தெரிவித்தனர். எதிர்ப்புகள் வலுத்து வந்ததை தொடர்ந்து பிரக்யா மன்னிப்பு கோரினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

News Counter: 
100
Loading...

Ramya