இந்தியாவில் தங்கம் இறக்குமதி 54 சதவீதம் அதிகரிப்பு

share on:
Classic

இந்தியாவில் தங்கம் இறக்குமதி கடந்த ஏப்ரல் மாதத்தில் 54 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 258 கோடி டாலர் மதிப்புக்கு தங்கம் இறக்குமதியானதாகவும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி மதிப்பு 54 சதவீதம் அதிகரித்து 397 கோடி டாலரை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கம் இறக்குமதியானது கணிசமான அளவுக்கு உயர்ந்ததையடுத்து நாட்டின் வர்த்தக பற்றாக்குறையானது ஐந்து மாதங்களில் இல்லாத அளவில் ஏப்ரலில் 1,533 கோடி டாலராக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

News Counter: 
100
Loading...

aravind