மளமளவென சரிந்து வரும் தங்கம் விலை..!

share on:
Classic

கடந்த ஒரு வாரத்தில் தங்கத்தின் விலை மளமளவென சரிந்து சவரனுக்கு 504 ரூபாய் வரை குறைந்துள்ளது.

தமிழகத்தில் தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் அட்சயதிரிதியை முன்னிட்டு  தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் உள்ளது. 

சென்னையில் கடந்த வாரம் அதிகபட்சமாக ஏப்ரல் 27ம் தேதி ஒரு கிராம் தங்கம் 3055 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 24,440 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரு கிராம் தங்கம் 2992க்கும்,  ஒரு சவரன் தங்கம் 23,936 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஒரு வார விலையை ஒப்பிடுகையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.504 குறைந்துள்ளது. மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 39.50 காசுகளுக்கும், ஒரு கிலோ வெள்ளி 39,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

News Counter: 
100
Loading...

aravind