விண்ணை எட்டும் தங்கத்தின் விலை..!

share on:
Classic

நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வரும் தங்கம் விலை சவரனுக்கு 28 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக சிறிது சிறிதாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, இம்மாத தொடக்கத்தில் இருந்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கடந்த 8 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு 1,896 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 68 ரூபாய் அதிகரித்து, 3,547 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு சவரன் தங்கம் 592 ரூபாய் அதிகரித்து 28,376 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஜெட் வேகத்தில் அதிகரித்து புதிய உச்சத்தை தொடும் தங்கத்தின் விலை, வாடிக்கையாளார்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

News Counter: 
100
Loading...

Ragavan