புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை..!!

share on:
Classic

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 28,000 ரூபாயை தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதன்விளைவாக தமிழகத்திலும் தங்கத்தின் விலை உச்சம் தொட்டு வருகிறது. ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் ஏற்றத்துடன் காணப்பட்டு வந்த தங்கத்தின் விலை, இன்று மேலும் 568 ரூபாய் அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 568 ரூபாய் அதிகரித்து 28,352 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 3,544 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக போர், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

News Counter: 
100
Loading...

Ragavan