2018-19ல் தங்கம் இறக்குமதி 3 சதவீதம் குறைவு..!!

share on:
Classic

நாட்டின் தங்கம் இறக்குமதி கடந்த நிதியாண்டில் 3 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த 2017-18 நிதியாண்டில் 3370 கோடி டாலர் மதிப்பிலான தங்கம் இறக்குமதியானது. இந்தநிலையில், சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2018-19 நிதியாண்டில் அதன் இறக்குமதி 3 சதவீதம் குறைந்து 3280 கோடி டாலர் மதிப்பிலான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை கணிசமாக குறைந்ததே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம், நடப்பு கணக்கு பற்றாக்குறை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan