ஜீலை 11 : தங்கம் விலை ஒரே நாளில் கிடுகிடுவென உயர்வு..!!

share on:
Classic

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு 456 ரூபாய் உயர்ந்துள்ளது.

தங்கத்திற்கான இறக்குமதி வரி 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்றைய தங்கம் விலை சவரனுக்கு 456 ரூபாய் உயர்ந்து 26, 616 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.. நேற்றைய தங்கத்தின் விலை சவரனுக்கு 26,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை நேற்றைய விலையை விட 57 ரூபாய் இன்று உயர்ந்துள்ளது..

நேற்று 3,270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம் இன்று 3, 327 ரூபாய்க்கு என்று விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 41.30 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிலோ வெள்ளியின் விலை 41,300 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan