கோவையில் 149 தங்க கட்டிகள் பறிமுதல்

share on:
Classic

கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 149 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

மும்பையை தலைமையிடமாக கொண்ட ப்ரிங்க்ஸ் நிறுவனம் நகை உற்பத்தியாளர்களுக்கு தங்கம் வழங்கி வருகிறது. அந்த நிறுவனத்தின் சவுரிபாளையம் கிளையில் இருந்து டவுன் ஹால் பகுதிக்கு வேன் மூலம் 149 கிலோ தங்க கட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அப்போது புளியகுளம் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையின் போது, தங்க கட்டிகளுக்கான உரிய ஆவணங்கள் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதனை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தனர். மேலும் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து தங்க கட்டிகளை பெற்றுக்கொள்ளலாம் என்று பிரிங்க்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு அறிவுறுத்தினர.

 

News Counter: 
100
Loading...

aravind