ஊக்க மருந்து சர்ச்சை : கோமதி மாரிமுத்து மறுப்பு

share on:
Classic

ஆசிய தடகள சாம்பியன்சிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

கத்தாரில் அண்மையில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்சிப் போட்டியின் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கணை கோமதி மாரிமுத்து தங்கப்பதக்கம் வென்றார். இந்நிலையில் கோமதி மாரிமுத்து அந்த போட்டியில் ஊக்க மருந்து பயன்படுத்தியதாக சர்ச்சை எழுந்துள்ளது. முதற்கட்ட ஊக்கப்பரிசோதனையில் கோமதி மாரிமுத்து தோல்வி அடைந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் இரண்டாம் கட்ட பரிசோதனையில் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யும் பட்சத்தில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு தடகள போட்டிகளில் பங்கேற்க கோமதிக்கு தடை விதிக்கப்படும் என தெரிகிறது. இந்த விவகாரத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து உட்பட அவரது கிராம மக்களும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind