அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!

share on:
Classic

அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் 1 மணி நேரத்திற்கும் மேலாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த மேல்பாக்கம் ரயில் நிலையம் அருகே கார்களை ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தகவலறிந்து சென்ற ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். 

இதனால் காட்பாடியில் இருந்து அரக்கோணம் வழியாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. ரயில் தடம் புரண்டது குறித்து சென்னை கோட்ட மேலாளர் மகேஷ் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். சரக்கு ரயில் தடம் புரண்டதால் பல்வேறு ரயில்கள் 90 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன.

 

News Counter: 
100
Loading...

aravind